மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்டூர் பகுதியின் பாஜக தலைவர் கங்கா பிரசாத் சர்மா, கடந்த ஜூன் 21 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கங்கா பிரசாத் சர்மா கடந்த 2015 லிருந்து அலிப்பூர்டூர் பகுதியின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்ததாகவும், இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது அலிப்பூர்டூர் பகுதியில் ஐந்து தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இதற்கு முன்னர் சென்ற முகுல் ராய் முன்னிலையில் கட்சியில் இணைத்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள முகுல் ராய், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும், “தற்போதைய சட்டமன்ற தேர்தலின் போதும் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளதாகவும், இத்தகைய வெளியேறுதல்கள் மேற்கு வங்காளத்தில் பாஜக கட்சிக்கு முடிவின் தொடக்கமாக இருக்கும்” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.