Aran Sei

முன்னாள் முதல்வரின் இறுதி அஞ்சலியில் தேசியக்கொடியை மறைத்துப் போர்த்தப்பட்ட பாஜக கொடி – இதுதான் தேசப்பற்றா என எதிர்க்கட்சியினர் கேள்வி

த்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின்  உடல்மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியின் மீது பாஜக  கொடிப் போர்த்தப்பட்டது.

கடந்த  1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்படும்போது, அம்மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த கல்யாண் சிங் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது இறுதி மரியாதை நிகழ்வின்போது அவரது உடல்மீது இந்திய தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்த நிலையில், அதனை பாதி மறைக்கும் அளவு பாஜகவின் கட்சிக்கொடியும் போர்த்தப்பட்டுள்ளது.

தேசியக் கொடியின் மீது பாஜக கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பாஜக கொடியைப் போர்த்தியுள்ளார்.  இதேநிலையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும்போது கல்யாண் சிங்கின்  உடல்மீது தேசியக் கொடி மட்டுமே போர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேசிய இளைஞர் காங்கிரசின் தேசியத் தலைவர், “புதிய இந்தியாவில் தேசியக்கொடியின் மீது பாஜகவின் கட்சிக்கொடி போர்த்தப்படுவது சரியா?”என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

source: தி வயர்

தொடர்புடைய பதிவுகள்:

ஒரு பேரரசு உருவாக துணையிருந்த உலகளாவிய அபின் மற்றும் போதைப் பொருள் கடத்தல் – தாமஸ் மனுவேல்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்தின் பெயரில் மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? – ஆர்.டி.ஐ யில் மறுக்கப்பட்ட பரிந்துரை குறித்த தகவல்கள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த பாலஸ்தீன மக்களின் போராட்டம் – இஸ்ரேலிய இராணுவத்தினர் தாக்கியதில் 24 பாலஸ்தீனர்கள் காயம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்