Aran Sei

உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் – பின்னடைவைச் சந்திக்கிறதா பாஜக?

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, மதுரா, வாரணாசி போன்ற மாவட்டங்கள் பாஜக அரசியலின் மையப்புள்ளிகள் என்றும் இந்தப் பகுதியில் நிலவும் அரசியலை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்றும் ஹெச்டபிள்யூ நியூஸ் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்துக்குப் பின்னர்,  மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி விவகாராத்தையும், வாரணாசியில் கியான்வாபி மசூதி விவகாரத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளது.

மார்ச் மாத ஊரடங்கால் 75 லட்சம் வேலை இழப்புகள் – இன்னுமொரு பொதுமுடக்கத்தை தாங்குமா இந்தியா?

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த பஞ்சாயத்து தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிவுள்ளன. இந்தத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வாரணாசி மற்றும் அயோத்தியில் முன்னிலைப் பெற்றுள்ளது, மாயவாதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அஜித் சிங் தலைமையிலான் ராஷ்ட்ரிய லோக் தளம் மதுராவில் அதிக இடங்களைப் பிடித்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியான வாரணாசி மாவட்டத்தைப் பொறுத்தவரை, பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்ட 40 இடங்களில் பாஜக 8 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 14 இடங்களையும், பகுஜன் சமாஜ் 5 இடங்களையும், மதச்சார்பற்ற அப்னா தளம் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஹெச்டபிள்யூ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, வாரணாசி தொகுதியில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலிலும் பாஜக தோல்விடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் – தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணர் பிறந்த இடம் என கூறப்படும் மதுராவில் உள்ள 40 இடங்களில், பகுஜன் சமாஜ் 12 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் தளம் 9 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அயோத்தி தொகுதியில் உள்ள 40 இடங்களில், சமாஜ்வாதி கட்சி 24 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் மீதமுள்ள இடங்களிலும் (10) வெற்றிப்பெற்றுள்ளனர்.

‘அம்மா உணவகத்தைத் சேதப்படுத்திய திமுகவினர்’ – சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவு

இன்னும் எட்டு மாதங்களில் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, பலத்த பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்