Aran Sei

‘உன் பெயர் முகமதா?’ என கேட்டு தாக்கிய பாஜக நிர்வாகி: மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்

த்திய பிரதேச மாநிலத்தில் 65 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் இந்த முதியவரை அவரின் பெயர் முகமதா எனக் கேட்டு பாஜக நிர்வாகி தினேஷ் குஷ்வாஹா சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முதியவரின் மரணத்தை காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலுக்கு உள்ளான முதியவரின் பெயர் பன்வார்லால் ஜெயின் எனவும் இவர் ரத்லாம் மாவட்டம் சர்சி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மன நலம் பாதிக்கப்பட்ட இவர் மே 15-ம் தேதி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அவரை காணவில்லை என காவல்துறையில் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், காவல்துறையும் கடந்த ஒரு வாரமாக தேடி வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

இந்நிலையில், 65 வயது முதியவரான ஜெயின் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த காணொளியில், முதியவர் ஜெயினை ‘உனது பெயர் என்ன முகமதா, உனது ஆதார் அட்டையை எடுத்து காட்டு’ என கேள்வி கேட்டு தினேஷ் குஷ்வாஹா சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில், நீமுச் மாவட்ட காவல்துறை அந்த முதியவரை சடலமாக கண்டெடுத்து அவரின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.

இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தாக்குதலில் ஈடுபட்ட தினேஷ் குஷ்வாஹாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை கொலை வழக்கு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

இந்த சம்பவத்தில் காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கும் என உள்துறை அமைச்சர் நாத்தோராம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ‘இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதற்கும் கட்சி அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரையும் மாநில அரசு சும்மா விடாது’ என பாஜக மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மக்களிடையே வெறுப்பு அரசியலை பாஜக முன்னெடுத்து வருவதுதான் இத்தகைய மோசமான நிலைக்கு மாநிலத்தை கொண்டு சென்றுள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜீது பட்வாரி குற்றம் சாட்டியுள்ளார்.

Source : NDTV

Nenjukku Needhi Review I சாதி வெறியர்களுக்கு செருப்படி I VCK Vikraman Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்