Aran Sei

‘இடஒதுக்கீட்டு கொள்கையை அவமதிக்கும் பாஜக’ – பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்

டஒதுக்கீட்டு கொள்கையை பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு அவமதிக்கிறது எனக்கூறி ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகஅறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, உத்தரபிரதேச மாநில மழைக்கால சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெகசிஸ் தொடர்பாக சுயாதீன விசாரணை கோரிய எதிர்க்கட்சிகள்: மறுத்த ஒன்றிய அரசு

அதுமட்டுமல்லாது, சமத்துவ இந்தியாவை கட்டமைக்கும் வகையில், அம்மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதியையும் பார்வையிடும் வகையில் ஜூலை 1 முதல் ஜூலை 21 வரை “பகுஜன் சைக்கிள் யாத்திரை” நடத்தவுள்ளதாக சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக அரசு தலித்துகளை ஒடுக்குகிறது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதாக ஒன்றிய அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது என்றும் சந்திரசேகர் ஆசாத் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்களின் விண்வெளி சுற்றுப்பயணம் – முதலாளித்துவ வீழ்ச்சியின் அடையாளம்

அதுமட்டுமல்லாது பாஜக தனது தோல்வியை மறைத்துக் கொள்வதற்காக, அதன் அமைச்சரவையில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடம் அளித்துள்ளது என்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்