Aran Sei

‘தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்’ – பாஜக சார்பாக போட்டியிட மறுத்த பேராசிரியர்

நான் பாஜக ஆதரவாளரே அல்ல என்றும் தலைகீழாக தொங்கவிட்டாலும் எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன் என்றும் கூறி, கேரள மாநில மனன்தாவடி தொகுதிக்கு பாஜக அறிவித்த வேட்பாளர் மணிகண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுத்துள்ளார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாகச் நடைபெறவுள்ளது. நேற்று (மார்ச் 14), அதில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ள 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

கேரளாவில் ஐயூஎம்எல் சார்பாக பெண் வேட்பாளர் – 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு இடமளித்த இஸ்லாமிய கட்சி

வயநாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி தொகுதியானது பழங்குடியினர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மணிகண்டன் போட்டியிடவுள்ளதாக பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், “நான் பாஜக கட்சியிலும் இல்லை. அதன் ஆதரவாளரும் இல்லை. என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒருவேளை, என்னுடைய பெயரில் வேறு யாராவது இருக்கலாம் என்று நினைத்து சந்தேகத்துடன் கேட்டபோது என்னுடைய பெயர்தான் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.” என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

மேலும்,“எனக்குத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை. என்னுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என யாரும் அரசியலில் இல்லை. ஆதலால் நான் தேர்தலில் போட்டியிடும் விருப்பமில்லை. நான் கால்நடைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக எனக்குரிய வேலையைச் செய்து கொண்டு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். அதனால், என்னை வேட்பாளராகத் தேர்வு செய்ததை நிராகரிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பணியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மணிகண்டன், அந்தச் சமூகத்தில் முதல் பட்டதாரி என்று பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

தனது முகநூல் பக்கத்தில், “நான் தலைகீழாக தொங்கவிடப்பட்டாலும், எம்மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்.” என்ற வாசகத்துடன் அம்பேத்கர் படத்தை இணைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்