Aran Sei

பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் கைது – தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை பெற்ற ஊழியர் மஹதோ, பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்

மேற்குவங்க மாநிலம் ஜார் கிரம் மாவட்டம் லால்கர் பகுதியைச் சேர்ந்த மஹதோ, காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் குழுவில் செயல்பட்டதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், மஹதோ தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருகிறார்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடிகள் அதிகம் வாசிக்கக்கூடிய பகுதியான ஜங்கள்மங்கள் பகுதியில், பாஜகவிற்கு எதிராக திரிணாமுல் சார்பாக மஹதோ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்