Aran Sei

வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்: தாக்குதல் நடத்திய விவசாயிகள்

ஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மலோத் நகரில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரின் ஆடைகளைக் கிழித்தெறிந்து விவசாயிகள் தாக்கியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த 120 நாட்களுக்கும் மேலாகப் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.

https://www.aransei.com/news/29431/

இந்நிலையில் அபோகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருண் நராங் நேற்று (மார்ச் 28) மலோத் நகரில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்புக்கு அவர் வந்தபோது, விவசாய சட்டங்களைத் திரும்பப்பெற கோரி போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் மீதும், அவர் வந்த வாகனங்கள் மீதும் கறுப்பு மை ஊற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.

இச்சம்பவம் நடந்த பிறகு, காவல்துறையினர் அருணை பாதுகாப்பாக ஒரு கடைக்குள் அழைத்துச் சென்றனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் அவரை காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். ஆனால், அங்கிருந்த விவசாயிகள், திடீரென நராங் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அவரின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விவசாயிகளைத் தடுக்க முயன்றும் அத்தாக்குதலில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.

கிழிந்த ஆடைகளுடன் மீண்டும் பாதுகாப்பாக ஒரு கடைக்குள் அருணை காவலர்கள் தங்க வைத்துள்ளனர். பிறகு, கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புடன் வேறு ஒரு வாகனத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முக்த்சர் போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத 300 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகையாளர்களிடம் அருண் நராங் கூறுகையில், “என்னைச் சூழ்ந்துகொண்ட விவசாயிகள் என் முகத்திலேயே குத்தினர். என் ஆடைகளைக் கிழித்து என்னை அவமானப்படுத்தினர். நான் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதற்கு விவசாயிகள் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான ஸ்ரீமோனி அகலி தால் காட்சியின் தலைவர் சுக்பிர்சிங், வன்முறை தாக்குதல் கண்டிக்கதக்கது என்று கூறியுள்ளார்.

மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுனில் ஜாக்கர், விவசாயிகளின் செயல் சட்டத்திற்கு புறம்பான நடவிக்கை என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்