Aran Sei

வாக்காளர்களின் ஆதார் தகவலை முறைகேடு செய்ததாக பாஜக மீது புகார்: தேர்தலை தள்ளி வைக்கலாமா என நீதிமன்றம் கேள்வி

Image Credits: The Hindu

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், புதுச்சேரி மக்களின் ஆதார் தகவலை திருடி தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாஜக மீது புகார் மனு  மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி அரசியல் கட்சிக்குச் சென்றது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அது குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

கொரோனா காலத்தில் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் – அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “குறுந்தகவல் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக தரப்பில் முன்அனுமதி பெறப்படவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சைபர் க்ரைம் போலீசார் அறிக்கை வெளியிட்டப்பிறகு, அது குறித்தான முடிவு எடுக்கப்படும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

’பிரிவினைவாத சக்திகளுக்கு அடிபணியமாட்டோம்’: வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக பாடல் வெளியிட்ட வங்காள கலைஞர்கள்

அதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, அப்படியானால் விசாரணை முடியும் வரை புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் அறிக்கையின் படி முடிவெடுக்கப்படும். அந்த முடிவு தகுதி நீக்கம் தொடர்பான முடிவாக இருக்கலாம்” என்று கூறியுள்ளது.

அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்

அதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, ஆதார் ஆவணங்கள் எப்படி அரசியல் கட்சிக்கு சென்றது என்பது தொடர்பான விசாரணையை ஆதார் ஆணையமும் நடத்த வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் மார்ச் 31 தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

Source: liveLaw

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்