Aran Sei

மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு – கல்வீச்சு, போலீஸ் தடியடி

மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் (மார்ச் 16) அக்கட்சியினர் போராட்டங்களை தொடர்கின்றனர்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்கள் முன்பு, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சில பாஜக அலுவலகங்களில், கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் இறங்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் “பாஜகவிற்கு வாக்கு இல்லை” எனும் சுவரொட்டிகள் எழுதிய மக்கள்: திருத்தி எழுதும் பாஜகவினர்

கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க தடைகளை தாண்டி பாஜக அலுவலகத்தில் நுழைய சிலர் முற்பட்ட போதும், சில அலுவலகங்களில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற போதும், காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் சிறிய அளவிலான தடியடியை நடத்தியுள்ளனர். இப்போராட்டக்காரர்கள் பலர், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கு வங்க பாஜக வேட்பாளர்கள் பட்டியல் – எதிர்ப்பு தெரிவித்து வெளியேறும் அதிருப்தி தலைவர்கள்

அம்மாவட்ட பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “கேனிங் வெஸ்ட் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அர்னாப் ராயை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தார். ஊழலில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கே பாஜக சீட் அளித்துள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்