Aran Sei

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் வன்முறை – விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் எட்டு பேர் கொல்லப்பட்ட வன்முறை குறித்து விசாரணையை மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ) தொடங்கியுள்ளது.

மார்ச் 21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் போக்டுய் கிராமத்தில் 10 வீடுகளுக்குத் தீ வைத்தனர். இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 26) தோராயமாக 20 பேர் கொண்ட சிபிஐ குழு, ஏழு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று ஆய்வு நடத்தியுள்ளது.

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

இது குறித்து, சிபிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நாங்கள் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இவ்விசாரணையை முடிக்க எங்களுக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளதால் போர்க்கால அடிப்படையில் விசாரணையை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் ஒரு பிரிவான தடய அறிவியல் ஆய்வகத்தின் (சிஎஸ்எஃப்எல்) அதிகாரிகளும் எரிந்த வீடுகளுக்குச் சென்று தடயங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்கம்: பிர்பூம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை – கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

நேற்று (மார்ச் 25), கல்கத்தா உயர் நீதிமன்றம் பிர்பூம் வன்முறை தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்ததோடு, ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் இவ்விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு விதித்துள்ளது.

Source: PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்