பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்து 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாய் அற்புதம்மாள் போராடி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரறைவாளனை விடுவிக்கக் கோரி கடந்த ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பேரறிவாளனின் விடுதலைக்காக பல போராட்டங்களை அரசியல் இயக்கங்கள் நடத்தியுள்ளன. சட்டரீதியாக பேரறிவாளனை மீட்க அவரது தாய் கடுமையாகப் போராடி வருகிறார். அவரின் வாழ்க்கையை இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படமாக எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட படத்தை இயக்கியவரும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான வெற்றிமாறன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அற்புதம்மாளாக யாரை நடிக்கப் போகிறார்கள் என்பதையும் அவர் முடிவு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.