Aran Sei

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் தாக்கப்பட்டார் – அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதாக காவல்துறை அறிவிப்பு

பரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் மட்டுமே சென்றனர். அவர்களில் ஒருவரான பிந்து அம்மினி கோழிக்கோடு கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரால் நேற்று (05.01.2021) தாக்கப்பட்டுள்ளார் என்று கேரள தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அம்மினியின் புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கோழிக்கோடு காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர் ‘மோகன்தாஸ்’ என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற தீர்ப்பு வந்தது. இதனையொட்டி 2019 ஆம் ஆண்டு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அம்மிணி, சபரிமலை கோயிலுக்குள் சென்று வந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை கோவிலுக்குள் 13-60 வயதுடைய இரு பெண்கள் மட்டுமே நுழைந்தனர். பிந்து அம்மினி மற்றும்  சமூக ஆர்வலரான கனகதுர்கா ஆவர்.
“நான் இனி இங்குப் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்வது மட்டுமே என்னிடம் இருக்கும் ஒரே வழி.” பிந்து அம்மினி இன்று ஊடகங்களிடம் கூறியுள்ளதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
கொச்சியின் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அம்மினியை  மிளகாய் கொண்டு 2019 நவம்பரில் தாக்கினார்.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் நுழைய உச்சநீதிமன்றம் அனுமதித்த போதிலும், பக்தர்கள், இந்துமத அமைப்புகள் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் வன்முறையை அடுத்து கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. கோவிலுக்குள் செல்ல முயன்ற ஊடகவியலாளர்கள் உட்படப் பல பெண்கள் தாக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் முதலில் உறுதியாக இருந்த கேரள அரசு, இறுதியில் அதனைக் கைவிட்டது.
Source : The Wire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்