Aran Sei

தேர்தல் நாளுக்கு முன்பு இருசக்கர வாகன பேரணி செல்ல தடை  – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை மட்டும் இருசக்கர வாகன பேரணி செல்ல அனுமதியளிக்க அளிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைக்கான தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள உத்தரவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ” “வாக்கெடுப்பு நாள் அல்லது வாக்கெடுப்பு நாளுக்கு முன்பு வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு சில இடங்களில் சில சமூக விரோத சக்திகளால் இருசக்கர வாகன பேரணிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்சினையை ஆணையம் பரிசீலித்து இருசக்கர வாகன பேரணிகளை வாக்கெடுப்பு நடைபெறும் தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் அல்லது அனைத்து வாக்கெடுப்பு நடைபெறும் தொகுதிகளில் வாக்கெடுப்பு நாளிலும் எந்த இடத்திலும் அனுமதிக்கப்படாது,  என்று முடிவு செய்துள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை ”வெற்று தேர்தல் அறிக்கை” : மக்கள் பாஜகவின் வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள் – செளகாதா ராய்

“இது மேலே குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக அவ்வப்போது வழங்கப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் மீறுகிறது. இந்த உத்தரவிற்கு இணங்குமாறு வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்கவும்” என அந்தக் கடித்ததில் கோரப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்