Aran Sei

போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட், அரசு வேலை கிடைக்காது – புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள பீகார், உத்தரகண்ட் காவல்துறை

ட்டம் ஒழுங்குச் சம்பவங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபவர்கள் மற்றும் இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட்,  அரசு வேலைகள், அரசின் மானியங்கள், வங்கி கடன்கள் பெறுவது இனி கடினமாகும் எனப் பீகார் காவல்துறை தனது புதிய உத்தரவில் தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர், வெளியிட்டுள்ள உத்தரவில், ”இது போன்ற அனைத்து காவல்துறை சரிபார்ப்பு (police verification) அறிக்கையில் குறிப்பிடப்படும். இத்தகைய மக்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

ஆயுத உரிமம், பாஸ்போர்ட், நன்மதிப்பு சான்றிதழ், அரசாங்கத்தில் ஒப்பந்த வேலை, அரசாங்க ஒப்பந்தங்கள், பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் ஏஜன்சி லைசன்ஸ், அரசாங்க உதவி அல்லது மானியம், வங்கி கடன் போன்ற சேவைகளைப் பெற காவல்துறையின் சரிபார்ப்பு அறிக்கை அவசியம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு படி மேலே, சமூக வலைதளங்களில் நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, கண்காணித்து, கவனிக்க திட்டமிட்டுள்ளது என உத்திரகண்ட் காவல்துறை கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்து ராஜ்ஜியம் அல்ல; நாஜி அரசே பாஜகவின் நோக்கம் – பிரஷாந்த் பூஷண் விமர்சனம்

பிப்ரவரி 2 ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற உத்தரகண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், சமூக ஊடகங்களில், ’தேச விரோத’, ’சமூக விரோத’ கருத்து தெரிவிக்கும் நபர்களுடைய பதிவின் ஸ்கிரின்சாட்டை, ஆதாரமாக உத்தரகண்ட் காவல்துறையினர் பத்திரடுத்தி வைக்க வேண்டும், என்றும், ”இதுவரை முதல் தகவல் அறிக்கை மட்டும் சரிபார்க்கப்பட்டதாகவும், இனி ஒரு நபர் சமூக ஊடகங்களில் நடந்து கொள்வது சரி பார்க்கப்படும்” எனத் தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

”ஒரு நபர் முதல் முறை பதிவிடும்போது அவருக்குக் கவுன்சிலிங் வழங்கப்பட்டு, தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். ஒரு வேளை அவர் தனது தவறுகளைத் திருத்தாத பட்சத்தில், அவருடைய பதிவுகளின் ஆதாரங்களாகச் சேமிக்கப்பட்டும். காவல்துறை சரிபார்ப்பில் ‘தேச விரோத’ பதிவுகள்பற்றிக் குறிப்பிட்டு சொல்வதற்கு எந்தச் சட்ட திருத்தமும் அவசியம் இல்லை” என அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பீகார் காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் ஒழுங்கு) ஜித்தேந்திர குமாரை, தொடர்பு கொண்டு கேட்டபோது ”பீகார் காவல்துறை அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு எந்த ஒரு தனிநபரின் ஜனநாயக உரிமையும் தடுக்கப்படவில்லை. போராட்டங்களின்போது கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே, ஒருவரின் நன்மதிப்பு சான்றிதழில் பாதிக்கும்” என அவர் தெரிவித்தாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்