Aran Sei

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட்ட பாஜக அமைச்சரின் மகன் – ஒருவர் காயம்

பீகார் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் அம்மாநில பாஜகவின் முத்த தலைவருமான நாராயண் பிரசாத்தின் மகன், அம்மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் சிறுவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்து உரிமம் பெற்ற துப்பாக்கியைக் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.

நேற்று(ஜனவரி 23) காலை, பெட்டியா முஃபாசில் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹர்தியா கிராமத்தில் உள்ள மாந்தோப்பில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, காலை 11.30 மணியளவில், சுற்றுலாத்துறை அமைச்சரின் மகன் பப்லு தலையிட்டு, அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறியதால், சிறுவர்களுக்கும் பப்லுவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

‘பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்துவிட்டது’- மகாராஷ்ட்ர முதலமைச்சர்

இதில் கோபமடைந்த அமைச்சரின் மகன் சிறுவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், ஹர்தியா கிராமத்தைச் சேர்ந்த ஜனார்தன் பிரசாத் என்ற சிறுவன்மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அக்கிராம மக்கள் சிலர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சிறுவன் காயமடைந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், தப்பிச் செல்ல முயன்ற பப்லுவை அடித்து உதைத்துள்ளனர். மேலும், அமைச்சரின் வாகனம்மீது கற்களை வீசியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை பப்லூவை மீட்டுள்ளனர்.

எங்களை தாக்கி சொத்துக்களை அழித்த குற்றவாளியை காவல்துறை காப்பாற்றுகிறது – மத்திய பிரதேச இஸ்லாமியர்கள் குற்றசாட்டு

இச்சம்பவம் குறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விசாரிக்க துணைப்பிரிவு காவல்துறை அதிகாரி (எஸ்டிபிஓ) முகுல் பரிமல் பாண்டே தலைமையிலான காவல்துறையினரின் குழு ஒன்று கிராமத்திற்கு விரைந்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். கிராமவாசிகளின் தாக்குதலில் பாப்லுவுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது கைகள் முறிக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்