Aran Sei

பீகார்: மசூதி மேல் காவிக்கொடியை ஏற்றி ராமநவமி கொண்டாடிய வலதுசாரியினர்

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு மசூதியின் சுவர் மீது ஏறியவர்கள் காவிக்கொடியை ஏற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜார்க்கண்ட்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – 8 பேர் காயம்

ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி நீண்ட வாள்கள் மற்றும் ஹாக்கி ஸ்டிக்குகளை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் முகமதுபூர் கிராமத்தில் உள்ள டாக் பங்களா மசூதியின் முன்பு ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலம் சென்றவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி டாக் பங்களா மசூதியின் மீது ஏறி காவிக்கொடியை நாட்டினர். அப்போது அங்குக் கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய முசாபர்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயந்த் காந்த், இது சம்பந்தமாக இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Source : NDTV

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மிரட்டும் இந்துத்துவாவினர். பதிலளிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்