பீகார் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது கடும் குற்றவழக்குகள் இருப்பது தெரிவந்துள்ளன. மேலும், அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட இடம் அளிக்கப்படவில்லை.
பீகார் அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்ற 14 பேரில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 43 விழுக்காட்டினர் கடுமையான கிரிமினல் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த கிரிமினல் வழக்குகளுக்கு 5 ஆண்டுகள் பிணையில் வர இயலாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அந்த அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
பீகாரில் தேர்தல் வெற்றி ஊர்வலம் – மசூதியைச் சூறையாடிய பாஜக ஆதரவாளர்கள்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது, தாராப்பூர் தொகுதியைச் சேர்ந்த மேவா லால் சவுத்ரி ரூ.12.31 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளார். தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அசோக் சவுத்ரி ரூ.72.9 லட்சங்களுடன் கடைசி இடத்தில் உள்ளார்.
நான்கு அமைச்சர்கள் தங்களது கல்வித்தகுதியை எட்டாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையில் இருப்பதாக அறிவித்துள்ளனர். 10 அமைச்சர்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு திங்களன்று ஆளுநர் பாகு சவுகான் தலைமையில் பதவி ஏற்றனர்.
நிதீஷ் குமார் – பாஜகவின் “நியமன” முதல்வர் : எதிர்க்கட்சிகள் குத்தல்
பீகாரில் நிதீஷ் குமார் அரசில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர்கூட அமைச்சராக இடம்பெறவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் போது ஒரு இஸ்லாமியர் அமைச்சராகச் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது, சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராகப் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அசோக் சவுத்ரி இடம் பெற்றுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.