Aran Sei

பீகார்: மணல், மதுபானக் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சுட்டுக் கொலை

Credit: The Wire

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தின் சகோ கிராமத்தில், ஊடகவியலாளர் சுபாஷ் குமார் மஹ்தோ, அவரது வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மே 20-ம் தேதி மாலை, நண்பரின் திருமண விருந்திற்கு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சுபாஷ். இரவு 8.44 மணியளவில் வீட்டின் அருகே வந்த போது அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தலையில் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அவரது நண்பரும் ஊடகவியலாளருமான அமித் போதார், “விருந்து முடிந்து விட்டு, குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரிடன் இருந்து சிறிது தூரம் தள்ளி இருந்தனர். அந்த நேரத்தில் சிலர் வந்து அவரை அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர்.” என கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் மீனா கோட்வால் உயிருக்கு ஆபத்துள்ளது, அவருக்கு பாதுகாப்பு வழங்குக: ஒன்றிய அரசுக்கு ஐ.நா மனித உரிமை ஆர்வலர்கள் கடிதம்

சிகிச்சைக்காக சுபாஷை அரசு சுகாதார மையத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபான மாஃபியா குறித்து விரிவான செய்தியை வெளியிட்டது மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் போது தீவிரமாக ஆதரவு அளித்தது ஆகியன அவரது கொலைக்கு காரணமாக அமைந்தன என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹ்தோ மரணத்திற்கு பிறகு, பெகுசராய் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமாரை சந்தித்த உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், “உள்ளூர் காவல்நிலையித்தின் நிலைய அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்ய விரிவான விசாரணை, மஹ்தோவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Source: The Wire 

சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review | Udhayanidhi Stalin | Arunraja Kamaraj

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்