Aran Sei

`கடைசிநேரத்தில் பீகார் காப்பாற்றப்பட்டுவிட்டது’ – உமாபாரதி

“ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும் வெற்றியடைந்திருந்தால், லாலு பிரசாத் யாதவ் பீகாரை மீண்டும் காட்டாட்சி நிலைக்குத் தள்ளியிருப்பார். நல்லவேளையாக பீகார் மாநிலம் கடைசிநேரத்தில் காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று பாஜக மூத்த தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து, போபாலில் செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி “தேஜஸ்வி நல்ல பையன், என்றாலும் அவர் மாநிலத்தை வழிநடத்த முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்லை.தேஜஸ்விக்கு வயதாகும்போதுதான் அவர் பீகார் மாநிலத்தை வழிநடத்த முடியும். ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும் வெற்றியடைந்திருந்தால் லாலு பிரசாத் யாதவ் பீகாரை மீண்டும் காட்டாட்சி நிலைக்குத் தள்ளியிருப்பார். நல்லவேளையாக பீகார் மாநிலம் கடைசிநேரத்தில் காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியவர் “கமல்நாத் இந்தத் தேர்தலில் மிகச் சிறப்பாகப் போராடினார். அவர் என் மூத்த சகோதரரைப் போன்றவர். மிகவும் ஒழுக்கமான நபர். அவர் இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றக் கட்சிகளின் பிரச்சாரத்தை எதிர்த்து, கமல்நாத் மிகவும் தந்திரமாகப் போராடினார் என்றும் ஒருவேளை அவர் தனது அரசாங்கத்தை இதேபோல் சிறப்பாக நடத்தியிருந்தால் பிரச்சினைகள் இருந்திருக்காது என்றும் உமாபாரதி பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்