Aran Sei

மூன்றாண்டுகளாக பட்டியலின மாணவர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணபங்களையே பெறாத பீகார் அரசு- தொழிநுட்ப கோளாறு எனக் கூறிவரும் அவலம்

ட்டியல் மற்றும்  பழங்குடியின மாணவர்களுக்கு ஒன்றிய  அரசால்  வழங்கப்பட்டு வரும்  போஸ்ட் மெட்ரிக்  உதவித்தொகையின் கீழ்  கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களிடமிருந்து பீகார் அரசு  ஒரு விண்ணப்பமும் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது தேசிய உதவித்தொகை இணையதளத்தில் எழுந்த தொழில்நுட்பக் கோளாறால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் தொழில்நுட்ப பிரச்சனை ஏன் சரிசெய்யப்படவில்லை  என்பது குறித்து  தெரிவிக்கவில்லை.

பீகார் மாநிலத்தில் பட்டியலின மக்கள் 16 விழுக்காடும் பழங்குடியின மக்கள் 1 விழுக்காடும் உள்ளனர். ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இந்த உதவித்தொகைத் திட்டதினால் பயன்பெறுகின்றனர்.

மேலும், கடந்த ஆறு வருடங்களாக பீகாரில் உள்ள பெரும்பாலான  பட்டியலின ,பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக்  உதவித்தொகை மறுக்கப்பட்டதாகவும், 2016-17  முதல்  2018-19 ஆண்டு வரை வேறு காரணங்கள் கூறப்பட்டதாகவும் தி இந்து குறிப்பிடுகிறது.

source: தி இந்து

தொடர்புடைய பதிவுகள்:

பாஜகவினர் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கங்கள் – ஜெயஸ்ரீ ராம் எனக் கூற மறுத்த பத்திரிக்கையாளரை ஜிஹாதி என மிரட்டிய இந்துத்துவவாதிகள்

ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு மசூதியின் மின்னணுசாதனங்களை மிரட்டி எடுத்து சென்றதாக புகார் – வழக்குப்பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

‘மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும், பிரிவினைவாத அரசியலும் தோல்வியடைந்துள்ளது’ – கபில் சிபல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்