Aran Sei

‘கொரோனா சிகிச்சைக்குப் மருத்துவமனையில் போதிய வசதி இல்லை’ – பணியை ராஜினாமா செய்த அரசு மருத்துவர்

பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பிற்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததற்கு முதலமைச்சர் நிதிஷ் குமாரே காரணம் என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான தேஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் வினோத் குமார் சிங்கின் ராஜினாமா கடிதத்தின்  நகலைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவியில் இருந்து விடுவிக்கக் கோரி பீகார் சுகாதாரச் செயலாளருக்கு, வினோத் குமார் சிங் எழுதியிருக்கும் கடிதத்தில், “நாளாந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (என்.எம்.சி.எச்) போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை எனப் பலமுறை நீனைவூட்டியும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.” என தெரிவித்துள்ளார்.

‘கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்களுக்கு தனிப்படுத்தல் கட்டாயம்’ – மத்திய பிரதேச அரசு உத்தரவு

மேலும், “இந்த உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சிறந்த கவனிப்பை வழங்க சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருபவள் என்ற முறையில், இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க விரும்பவில்லை”என குறிப்பிட்டுள்ளார்.

இதன் நகலைப் பகிர்ந்துள்ள  பீகார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ”இது நிதிஷ் குமாரின் தவறான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஆக்ஸிஜன் இல்லாதததால் என்.எம்.சி.எச். கண்காணிப்பாளர் பணிப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நிலைமையை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். கடந்த 16 ஆண்டுகளாக முதலமைச்சர் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அது என்ன 16?. 1600 ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருந்தாலும், தனது தவறுகளை ஏற்க மாட்டார்” என குற்றம்சாட்டியுள்ளார்.

 

மாநிலத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பீகார் அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன் படி, நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (என்.எம்.சி.எச்), பாட்னா மற்றும் கயாவில் உள்ள அனுக்ரா நாராயண் மருத்துவமனை ஆகியவற்றை முழுநேர கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்றப்படவிருந்தது. அவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட  சில நாட்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்