பீகார் மாநிலம் பாஸ்ர் மாவட்டத்தின் சவுசா நகரப்பகுதியில் , கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்கள், கங்கை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை எரிக்க மயானங்களில் இடம் கிடைக்காததால், இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை கங்கை ஆற்றில் விட்டுவிடுவதாகவும், இதன் எண்ணிக்கை ஏறத்தாழ 40 -150 வரை இருக்கக்கூடும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை
இதன் காரணமாக, கங்கை ஆற்றில் மிதந்து வரும் சடலங்கள், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியான சவுசா நகரப்பகுதியின் அருகாமையில் கங்கை ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பாஸ்ர் மாவட்டத்தைச் சார்ந்த அதிகாரி கே.கே.உபாத்யாயா , “அந்த சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுளோம், சடலங்கள் 5-7 நாட்கள் நீரில் மிதந்து பீகார் பகுதியை வந்தடைந்திருக்கின்றன. இந்த சடலங்கள் உத்தரப்பிரதேசத்தின் எந்த நகரப்பகுதியை சார்ந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் – பின்னடைவைச் சந்திக்கிறதா பாஜக?
மேலும், “இந்த சடலங்கள் நிச்சயமாக உத்தரபிரதேச மாநிலத்தை சார்ந்தவையாகவே இருக்கும். ஏனென்றால் பீகார் மாநிலத்தில் சடலங்களை நீரில் விடும் வழக்கம் இல்லை.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சடலங்களினால் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அபாயம் உள்ளதென்று சவுசா பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ள நிலையில், பீகார் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தி வயர் தெரிவித்துள்ளது.
இதே போன்று, கடந்த மே 8 அன்று, ஹமீர்பூர் நகரில் யமுனை ஆற்றில் ஓரளவு எரிந்த நிலையில், எண்ணற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.