இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த பீகார் சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் கடந்த வாரம் பேசியது பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 28) கூடிய பீகார் சட்டப்பேரவையில், ஹரிபூஷன் தாக்கூர் பச்சாலை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜஸ்தான்: பட்ஜெட்டை கறுப்பு நிற பெண்ணுடன் ஒப்பிட்ட பாஜக தலைவர் – வலுக்கும் எதிர்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கீழ் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை சமஸ்திபூர் நகரில் பசுக் காவலர்கள் என்று கூறப்படும் கும்பல் ஒன்று கொலை செய்தது குறித்தும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசு தரப்பிலிருந்து வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி அளித்துள்ளார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் அந்த பதில்களை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.