நேற்று பீகார் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாகச் சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்னர்.
காவல்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கும் சிறப்பு ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராக கேள்வி எழுப்பிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் உறுப்பினர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்
இந்தச் சிறப்பு சட்டத்தின் படி காவல்துறை நினைத்தால் பிடிஆணை(police warrant) பெறாமலே யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்.
இந்த மசோதா கொண்டுவரப்பட்ட உடன் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவைத்தலைவர் விஜய் குமார் சின்ஹாவின் இருக்கையின் முன், மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு
இந்நிலையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்
विधानसभा में महिला विधायकों का चीरहरण होता रहा।सरेआम उनकी साड़ी को खोला गया, ब्लाउज़ के अंदर हाथ डालकर खींचा गया, अवर्णीय तरीक़े से बदसलूकी की गयी और नंगई की पराकाष्ठा पार कर चुके नीतीश कुमार धृतराष्ट्र बन कर देखते रहे।
सत्ता आनी-जानी है लेकिन इतिहास तुम्हें कभी क्षमा नहीं करेगा pic.twitter.com/kbl9L4K5Z6
— Rabri Devi (@RabriDeviRJD) March 24, 2021
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ராப்பரி தேவி, திருதுராஷ்டனைப் போலச் சட்டமன்றத்தில் பெண்கள் சேலை பிடித்து இழுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வரலாறு இதற்குப் பதில் சொல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
My Name is Tejashwi. CM Nitish & his puppet officers must know that no govt is permanent. MLAs were abused and beaten inside the Assembly. They have set an unparliamentary trend. If CM does not apologise for the incident, we may boycott the Assembly for the remaining tenure.
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 24, 2021
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவர் யாதவ்தேஜஸ்வி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , “நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம், நிதிஷ் குமார் அரசின் இந்தப் போக்கிற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் மீதமிருக்கும் ஆட்சிக்காலம் வரை சட்டமன்றத்தை புறக்கணிக்கப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.