Aran Sei

புவனகிரி: பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஓடையைக் கடக்கும் மாணவர்கள்

டலூர்  மாவட்டத்தில் பள்ளி செல்லும் வழியில் பாலம் இல்லாத்தால் ஆபத்தான முறையில் மாணவர்கள் ஓடையைக் கடக்கின்றனர்.

புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் ஓடை மேல் இருந்த பாலம் இடிந்ததால் தற்போது அந்த வழியைக் கடக்க ஆபாத்தான முறையை அவ்வூர் மக்கள் கையாளுகின்றனர்.

இதுகுறித்து அரண்செய்– யிடம் பேசிய மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான ராஜா, “எங்கள் பகுதியில் அருந்ததியர் குடும்பங்கள் 200 உள்ளன. இங்கிருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். இங்கு ஏற்கனவே பாலம் இருந்தது; மூன்று வருடங்களுக்கு முன்பு பாலம் இடிந்து விழுந்தது. ஓடையில் விழுந்த பாலத்தால் விவசாயத்திற்கு தண்ணீர் போகத் தடையாக இருக்கிறது என்று சொன்ன காரணத்தினால் இடிந்த பாலத்தை முழுவதும் அகற்றினோம். ஓடையைக் கடப்பதற்கு அருகில் இருந்த ட்ராஸ்ஃபாமை ஓடையின் குறுக்கே போட்டுப் பாதையாகப் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.

ஜஹாங்கிர்புரி சம்பவம்: சிலைகள் அமைப்பு; வீடுகள் இடிப்பு; மௌனமாக இருந்தால் நாட்டையும் அழித்துவிடுவார்கள் – பிரகாஷ்ராஜ்

மேலும் அவர் கூறியபோது, பள்ளி, கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற வேலைகளுக்குச் செல்ல வழி இல்லாத காரணத்தால் மூன்று கிலோமீட்டர் சுற்றியும்,  வாய்க்காலில் இறங்கியும் மிகவும் ஆபத்தான வழியில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல மிகவும் தாமதம் ஏற்படுகிறது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வழி இல்லாத்தால் அவதிபட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள், முதியவர்கள், கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பாலம் வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அரண்செய் –யிடம் மருதூர் கிராமத்தைச்  சேர்ந்த பட்டதாரியான ராஜா தெரிவித்தார்.

சீமானை இயக்குவது பார்ப்பனியம்தான் – விளக்குகிறார் ஜெயராமன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்