Aran Sei

காஷ்மீரில் சமஸ்கிருத, வேத பாடசாலைகளுடன் திருப்பதி தேவஸ்தான கோயில் : அடிக்கல் நாட்டிய துணைநிலை ஆளுநர்

ம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது.

நேற்று (ஜூன் 13), ஜம்மு நகரின் மஜீன் கிராமத்தில் நடைபெற்றுள்ள பூமி பூஜையில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அடிக்கல் நாட்டியுள்ளார். இதில், ஒன்றிய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜி. கிஷன் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் ஆர்எஸ்எஸ் தேசிய நிர்வாக உறுப்பினர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இக்கோயில் ரூ .33.22 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், வேத பாடசாலை, விடுதிகள், பணியாளர்கள் குடியிருப்பு, கல்யாண மண்டபம் போன்றவை கட்டப்படவுள்ளன.

‘இது எங்கள் காஷ்மீர், நீங்கள் வெளியிலிருந்து வந்திருக்கிறீர்கள்’ என்று பேசிய பெண் காவலர் – உபா சட்டத்தில் கைது

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேச அரசு இதற்கு தேவையான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “சமஸ்கிருத மொழியை கற்பிக்கவும், வேதங்களை குறித்த போதனைகள் செய்யவும் அவற்றை கற்பிக்கவும் தேவஸ்தான வாரியம் ஒரு பாடசாலையை நிறுவ உள்ளது. ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இது பெருமைமிக்க நாள். ஜம்மு காஷ்மீர் மற்றும் வட இந்திய மக்களின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றியதற்கு தேவஸ்தான வாரியத்திற்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

source; indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்