Aran Sei

பீமா கோரேகான் வழக்கில், செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் மறுப்பு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

credits : the wire

பீமா கோரேகான் வழக்கில், மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் உள்ளவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமூக செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகாவின் ஜாமீன் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கௌதம் நவ்லாகா தாக்கல் செய்த மேல்முறையீட்டு முனுவை, நீதிபதிகள் யூ.யூ.லலித் மற்றும் கே.எம். ஜேசப் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.

மார்ச் 26 ஆம் தேதி, கௌதம் நவ்லகாவின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஜாமீன் பெற உரிமை உண்டு என கோரி கௌதம் நவ்லகா தாக்கல் செய்திருந்த மனுமீது தேசிய புலனாய்வு முகமையின் கருத்தை உச்சநீதிமன்றம் மார்ச் 3 ஆம் தேதி கேட்டிருந்தது.

கௌதம் நவ்லகாவுக்கு எதராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், திருத்தி பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கௌதம் நவ்லகா மற்றும் ஆனந்த் டெல்டும்பே ஆகியோர் தேசிய புலனாய்வு முகமை முன்பு ஏப்ரல் 14 ஆம் தேதி ஆஜராகினர்.

ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அமைப்புக்கு நிதி வழங்கிய ட்விட்டர்: வெறுப்பையும் மதவெறியையும் பரப்புவர்களை ஊக்கப்படுத்துகிறீர்களா? – கேள்வி எழுப்பும் பிரபலங்கள்

11 நாட்கள் தேசிய புலனாய்வு முகமையின் கட்டுப்பாட்டில் இருந்த கௌதம், ஏப்ரல் 25 ஆம் தேதி, நவி மும்பைக்கு அருகில் உள்ள தலோஜா சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டு எல்கர் பரிஷாத் கூட்டத்தில் பங்கேற்ற சில செயல்பாட்டாளர்கள், வன்முறையைத் தூண்டும வகையில் பேசியதாகவும், அதுவே அதற்கு அடுத்த நாள், பீமா கோரேகானில் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்