Aran Sei

வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் தாயின் நினைவுநாளில் பங்கேற்க அனுமதி – பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்க்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரது தாயின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் ஆகஸ்ட் 13 முதல்  21  வரை 9 நாட்கள் தற்காலிக பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் மாவோயிஸ்ட்களுடன்  தொடர்புடையவர்  என்று கூறப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்  சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும், கடந்த செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு, வழக்கறிஞர்  சுரேந்திர  காட்லிங்  கொரோனாத் தொற்றால் இறந்த  தனது தாயின்  இறுதி  சடங்கில்  கலந்துக்  கொள்ள  தாக்கல்  செய்த அவசர பிணை   மனுவை, குற்றத்தின்  தன்மையைக்  காரணம்  காட்டி உச்சநீதிமன்றம்  தள்ளுபடி  செய்திருந்தது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று,  சுரேந்திர  காட்லிங்கின் குடும்பத்தினர் அவரது  தாய்க்கான மீதமுள்ள இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து,  இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டி  சுரேந்திர  காட்லிங் தாக்கல் செய்த   மனுவில் அவருக்கு   9 நாட்கள் தற்காலிக பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்