Aran Sei

உ.பி சட்டமன்ற தேர்தல்: யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார்

த்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத், கோரக்பூர் சதார் தொகுதியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
வழக்கறிஞரான சந்திரசேகர் ஆசாத், தலித் மக்கள் உரிமைகள் அமைப்பான பீம் ஆர்மியை துவங்கி அதன் தேசியத் தலைவராக உள்ளார். 2020 மார்ச் மாதம் சமாஜ் கட்சியை ஆசாத் உருவாக்கினார்.
சந்திரசேகர் ஆசாத் சமீபத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் அவருக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதால் கூட்டணியை நிராகரித்தார்.
எனது போராட்டம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிரானது என்று சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார்.
Source : The Wire
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்