Aran Sei

பீமா கோரேகான் வழக்கு – வரவர ராவ் உடல் நிலையில் முன்னேற்றம்

credits : the newindian express

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள கவிஞர் வரவர ராவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது தெரிவிக்கப்பட்டதாக லைவ்லா இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புள்ளதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவர ராவ் கைது செய்யப்பட்டு, மஹாராஷ்டிராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, வரவர ராவின் மனைவி பெண்டியலதா ஹேமலதா மருத்துவ காரணங்களுக்காக வரவர ராவிற்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார்.

‘வரவர ராவ் பேச்சாளர்தான் ஆனால் அர்னாப் கோஸ்வாமி போல் கத்த முடியாது’ – வேணுகோபால் ராவ்

இந்த மனு திங்களன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கர்னிக் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது.  வரவர ராவின் உடல்நலம் குறித்த நீதிபதிகளின் கேள்விகளுக்கு, அவர் சார்பாக மூத்த வழக்குரைஞர் ஆனந்த் க்ரோவர் பதிலளித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு சார்பாக ஏ.எஸ்.ஜி அனில் சிங் வாதாடினார்.

நீதிபதிகள் வரவர ராவின் உடல்நலம் குறித்து கேட்ட போது, “ கை நடுக்கம் இன்னும் இருக்கிறது.வேறு சில பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனால், அவருடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உள்ளது” என ஆனந்த் க்ரோவர் பதிலளித்தார். வரவர ராவிற்கு முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா என நீதிபதிகள் கேட்டதற்கு, “ஜே.ஜே மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் இருந்தார்கள், போதுமான அளவில் சுகாதார ஊழியர்கள் இல்லை. இதே பிரச்சினை தலோஜா சிறையிலும் இருந்தது” என்றார்.

`சிறையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்’ : உயர் நீதிமன்றம் உத்தரவு

முதன்மை அரசு தரப்பு வழக்கறிஞர், வரவர ராவின் இரத்த அழுத்தம் மட்டும் தான் பிரச்சினையாக உள்ளது என்பதால் அவரை ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றிவிடலாம் என்றதற்கு , அவருடைய புதிய மருத்துவ பதிவுகளை பார்க்காமல் வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியாது என நீதிமன்றம் பதிலளித்தது. பிறகு, இந்த மனு  மீதான விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

“கழிவறைக்குக் கூடச் செல்லமுடியாமல் உள்ளார் வரவர் ராவ்” – மருத்துவ பரிசோனைக்கு நீதிமன்றம் உத்தரவு

புனேவில், பீமா கோரேகான் போர் நடந்து இருநூறு ஆண்டுகள் நிறைவானதையொட்டி 2018 ஆம் ஆண்டு எல்கர் பரிசத் நிகழ்வு நடந்தது. நிகழ்வு நடந்து முடிந்த மறுநாள்,  இரு சமூகங்களுக்கு இடையே மோதல் உண்டானது. இந்த மோதலுக்கு காரணமாக இருந்ததாக கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி, கௌதம் நவ்லாகா, வரவர ராவ் உட்பட பலர் பயங்கரவாத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீமா கோரேகாவுன் வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது நிலுவையில் வைக்கப்படுகிறது.

சமீபத்தில், பீமா கோரேகாவுன் வழக்கில் கைதான கபிர் கலா மஞ்ச் பாடகர்களின் கைதுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய புலனாய்வு அமைப்பு, பாடகர்கள் இருவரும் மோடியை விமர்சித்து பாடியதால் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்