Aran Sei

மிஷன் பஞ்சாப், பஞ்சாப் மாடல் ஆட்சி: தேர்தல் திட்டங்களை அறிவித்த பாரதிய கிசான் யூனியன்

Image Credit : thehindu.com

போராடும் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய கிசான் யூனியன் ஹரியானா தலைவர் குர்னாம் சிங் சாருனி, தான் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆனால் போட்டியிடுவதற்கும், பஞ்சாப் மாதிரி ஆட்சியை முன்வைப்பதற்கும் மக்களைத் திரட்டுவேன் என்று கூறியுள்ளார்.

நேற்று(நவம்பர் 25), ஏஎன்ஐ-யிடம் பேசியுள்ள குர்னாம் சிங் சாருனி, “நான் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், மக்கள் போட்டியிடுவதற்காகவும் ஒரு மாதிரி ஆட்சியை அமைக்கவும் மக்களைத் திரட்டுகிறேன். பஞ்சாபில் நாங்கள் ஆட்சியை அமைத்தால், சொந்தக் கட்சியை உருவாக்குவோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மொத்த நாடும் எங்களில் பஞ்சாப் மாதிரியை காணவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் ‘மிஷன் பஞ்சாப்’ நடத்தி வருகிறோம். வாக்குகள் உள்ளவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும், மாறாக பணம் உள்ளவர்கள் ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் மிஷன் பஞ்சாப். முந்தைய விதிகள் எப்படி இருந்தது என்றால், வாக்காளர்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றப்படும். ஆனால், தற்போது, பணக்காரர்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றப்படுகிறது” என்று குர்னாம் சிங் சாருனி குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 77 இடங்களை பெற்று, அறுதிப் பெரும்பான்மையோடு, 10 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த சிரோமணி அகலிதளம்-பாஜக அரசாங்கத்தை அகற்றியது.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்