Aran Sei

‘திருத்தங்களுடன் வேளாண் சட்டங்களை அமல் படுத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் விவசாய சங்கம் வேண்டுகோள்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) அண்மையில் ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களை தேவையான திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கோரியுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(டிசம்பர் 25), டெல்லியில் நடைபெற்ற பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதிவரை, சங்கத்தின் அனைத்து பிராந்திய தலைமையகங்களிலும் போராட்டங்கள் தொடரும் என்றும் ஜனவரி 11 அன்று குடியரசுத் தலைவரிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, பேசியுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலாளர் கே. சாய் ரெட்டி, “விவசாய சட்டங்களில் சில திருத்தங்களைதான் கோரினோம். ஆகவே அவற்றை ரத்து செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு ஒவ்வொரு விளைப்பொருட்களுக்கும் உரிய விலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்கனவே தாங்கள் முன்வைத்துள்ளோம் என்று பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்