Aran Sei

இன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத்பந்த்: அமைதியைக் கடைப்பிடிக்க விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை

ன்று (மார்ச் 26) நடைபெறும் பாரத் பந்தில் விவசாயிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் மோதல்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் போராடும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய பாரத் பந்தில் அனைத்து கடைகள், மால்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். சாலை போக்குவரத்துகள், ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்படும். ஆம்புலன்ஸ் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற சேவைகளும் இயங்காது. டெல்லியின் உட்பகுதிகளிலும் பாரத் பந்த் கடைப்பிடிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – விவசாயிகள் இணையும் மகாபஞ்சாயத்து

காய்கறி சந்தைகளும் மூடப்படும் என்று குறிப்பிட்ட விவசாயிகள் சங்க மூத்த தலைவர் பல்பீர் சிங் ராஜேவால், அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இன்றைய பாரத் பந்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. மேலும், விவசாயிகள் பல்வேறு இடங்களில் ரயில் பாதைகளை முடக்குவார்கள்.” என்று கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்