Aran Sei

விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பாரத்பந்த் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

Image Credit : tribuneindia.com

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி இன்று காலை தொடங்கிய முழு அடைப்புப் போராட்டத்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத்தைத் தொடர்ந்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத்பந்த்: அமைதியைக் கடைப்பிடிக்க விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று காலையிலேயே போராட்டத்தைத் தொடங்கினார். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தர்ணா போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகங்கள் இயங்கவில்லை. பஞ்சாபில் மட்டும் 120 இடங்களில் மறியல் நடைபெற்றுவருகிறது.

தலைநகர் டெல்லியில், காசிபூர் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 24ஐ காவல்துறையினர் மூடிவிட்டனர். இந்த எல்லையில், கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

காசிபூர் எல்லை விவசாயிகளின் போராட்ட்தால் மூடப்பட்டதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றுவந்தன. ஆனால், இன்றைய முழுஅடைப்பை ஒட்டி விவசாயிகள் அந்தப் பாதையையும் மூடியுள்ளனர்.

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதோடு, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கான மின் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்