Aran Sei

உயரும் கொரோனா தடுப்பூசி விலை – தனியாருக்கு ரூ.1200 நிர்ணயித்த பாரத் பயோடெக்

கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையைப் பல மடங்கு உயர்த்தி பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மே 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 50 விழுக்காடு வரை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் வெளி சந்தைகளுக்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மருத்திற்கான விலையை முன்பே அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மூச்சு விட தவிக்கும் இந்தியாவைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தான் மக்கள் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து கோவிட்ஷீல்ட் தடுப்பூசிக்கான விலையைச் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையைப் பாரத் பயோடெக் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையின் படி மத்திய அரசுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு ரூ 150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”

மேலும், “மாநில அரசுகளுக்கு ரூ 600, தனியார் நிறுவனங்களுக்கு ரூ 1200, ஏற்றுமதிக்கான விலையாக 15 முதல் 20 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்