Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்

ன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டகளுக்கெதிராக விவசாயிகள் நாடுதழுவிய அளவில்  முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த  ஓராண்டு நிறைவையொட்டி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்திருந்தது.

இதுகுறித்து தெரிவித்திருந்த  சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு , செப்டம்பர் 26 அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும், இதற்குப் பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பதாக கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியுள்ளது.

 

இந்தப் போராட்டம்குறித்து நேற்றைய தினம் [செப்டம்பர் 26] தெரிவித்திருந்த பாரதிய வேளாண் சங்கத்தலைவர் ராகேஷ் திகைத், “வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த 1௦ மாதமாக போராடி வருகின்றனர். அவர்கள் 1௦ வருடமானாலும் போராட தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற கருப்புச் சட்டங்களை அனுமதிக்க முடியாது”  என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்  பர்னாலா ரயில்நிலையத்தில் ரயில் தண்டவாளங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதே போன்று, போராட்டத்தின் காரணமாக  உத்தரபிரதேசத்தில் இருந்து காசிப்பூர் செல்லும் சாலை  மூடப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், எஸ்.ஏ.டி, எஸ்.பி, பி.எஸ்.பி, ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: THE INDIAN EXPRESS

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்