Aran Sei

பாரத் பந்த் : அரசின் கொடூரமான தந்திரத்தைப் பின்னுக்குத் தள்ளுவோம் – விவசாய சங்கங்கள்

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் இ்ன்று (08.12.20) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (6-12-20) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விவசாயத் தலைவர் பல்தேவ் சிங் நிகல்கார், “பாரத் பந்த்-ன் போது அவசர ஊர்திகளும் திருமண ஊர்வலங்களும் அனுமதிக்கப்படும்” என்றும், “சாலை மறியல் புதன் கிழமை மதியம் 3 மணி வரை நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : ’பத்மஸ்ரீ’ விருதை திருப்பி அளித்த கவிஞர்

மத்திய அரசால் இயற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை “கறுப்புச் சட்டங்கள்” என்று கூறியுள்ளார் தெலுங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ். டிசம்பர் 8-ம் தேதி விவசாய அமைப்புகளால் அழைக்கப்பட்ட “பாரத் பந்த்” நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்குமாறு மாநில விவசாயிகளிடம் ராமாரவ் தனது வேண்டுகோளை முன் வைத்துள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன் ட்விட்டர் பக்கத்தில் ”விவசாயிகள் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராடி வருகின்றனர். விவசாய அமைப்புகள் டிசம்பர் 8 ம் தேதி ”பாரத் பந்த்”திற்கு விடுத்துள்ள அழைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனுடன், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு (AIKSCC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ”சமூகத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் அடக்குமுறைக்குத் தன்னிச்சையாக பதில் அளித்து, அவர்களுக்கு ஆதரவாகக் கரம் கோத்து நிற்கின்றனர். டிசம்பர் 8-ஆம் தேதி பாரத் பந்த் உள்ளிட்ட எந்த ஒரு அழைப்பும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை முன்னெடுத்து அரசின்  கொடூரமான தந்திரத்தைப் பின்னுக்கு தள்ளுவதற்காக மட்டுமே இருக்கட்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக இலவசமாக ஆஜராக தயார் – துஷ்யந்த் தவே அறிவிப்பு

டிசம்பர் 8-ம் தேதி அன்று பாரத் பந்த் முழு அடைப்புக்கு இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா கட்சி, குப்கர் பிரகடனத்திற்க்கான மக்கள் கூட்டணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மர்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்