Aran Sei

விவசாய சட்டங்களை நீக்க கோரி பாரத்பந்த் – முடங்கியது டெல்லி, ஹரியானா, பஞ்சாப்

Image Credit : tribuneindia.com

போராடும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்திருந்த பாரத் பந்த், நேற்று (மார்ச் 23) பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நடத்திய போராட்டம் எவ்வித வன்முறை சம்பவங்களும் இல்லாமல் நடந்தேறியுள்ளது.

ஹரியானா மாநில விவசாயிகளின் தகவல்களின் படி, அம்மாநிலத்தில் 365 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மற்றும் இணைப்புச் சாலைகள் உட்பட 311 இடங்களில் சாலை முற்றுகை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பாரத்பந்த் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

பாரத் பந்தின் அதிகபட்ச தாக்கம், ஜிந்த், ஹிசார், கைதல், ஃபதேஹாபாத், சிர்சா, பிவானி, ரோஹ்தக், ஜஜ்ஜார் மற்றும் குருக்ஷேத்ரா ஆகிய ஹரியானாவின் ஒன்பது மாவட்டங்களில் உணரப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 32 விவசாயிகள் சங்கங்கள், அம்மாநிலத்தில் 200 இடங்களில் தர்ணா போராட்டங்களை  நடத்தியுள்ளன. கிசான் மஜ்தூர் சங்கராஷ் கமிட்டியானது 12 மாவட்டங்களில் 165 இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளன.

மேலும், பாரதிய கிசான் யூனியனும் 16 மாவட்டங்களில் 50 இடங்களில் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்