ரயில் பயணத்தின்போது ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை பயணிகள் தொலைப்பேசிக்கு சார்ஜ் செய்யக்கூடாது என ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு – ஹஸுர் சாஹிப் நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பின் ரயில்வே துறை இதுகுறித்த அறிவிப்பை அனைத்து ரயில்வே மணடலங்களுக்கும் அனுப்பியிருந்தது.
இந்த அறிவிப்பு சரிவரப் பின்பற்றப்படாத நிலையில், அதிகரிக்கும் ரயில்வே தீ விபத்துகளின் காரணமாக மீண்டும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ரயில்வே துறையின் இந்த அறிவிப்பை, மேற்கு மண்டல ரயில்வே கடந்த மார்ச் 16 அன்றே நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள தென்னக ரயில்வே துறையின் உயரதிகாரி , “ரயில் பயணத்தில் ஏற்படும் தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை சார்ஜ் செய்யப்பயன்படும் மின்இணைப்புகள் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
SOURCE; PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.