Aran Sei

‘இஸ்லாமியப் பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் தாக்கப்பட்டார்’ – இருவரை கைது செய்த காவல்துறை

பெங்களூரு மாநிலத்தில்  ஒன்றாக வாகனத்தில் சென்ற  இந்து மதத்தைச் சார்ந்த  ஆணையும், இஸ்லாமியப் பெண்ணையும் வழிமறித்த  இருவர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து  தாக்கிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தன்னுடன் பணிபுரிந்த  சக இஸ்லாமியப் பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட  வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, வழிமறித்த இருவர் ஏன் இஸ்லாமியர் அல்லாதவருடன் பயணிக்கிறாய்  என்று கேள்விஎழுப்பி தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணிடம் கேள்விஎழுப்பிய ஒருவர், “உன் பெயர் என்ன? உங்களுக்கு வெட்கமாக இல்லையா …? நாங்கள் வாழும் காலம் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் நாய்கள் மற்றும் பூனைகள் போல நடந்துகொள்கிறீர்கள்? ” என்று  கூறியுள்ளார்.

அவர்களைத் தாக்கிய அந்த இருவரும், இந்து மதத்தைச் சார்ந்த  ஆணை கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு, அந்தப் பெண்ணின் கணவரையும் அழைத்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

SOURCE: தி வயர்  

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்