இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூரு பொறியியல் மாணவர் விஷால் குமாரை, ஜனவரி 10ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம்(ஜனவரி 3) பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்ட அம்மாணவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, நேற்று(ஜனவரி 4) பாந்த்ரா பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போது, விஷால் குமாரை பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தவும் மும்பை காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள நீதிபதி, விஷால் குமாரை ஜனவரி 10ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவரது வீட்டை சோதனை செய்யவும் மும்பை காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.
“முன்னதாக, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு பெண்ணை, மும்பை காவல்துறையின் தனிக் குழு ஒன்று உத்தரகண்ட் மாநிலத்தில் கைது செய்தது. அப்பெண்ணுக்கும் விஷால் குமாருக்கும் தொடர்பிருக்கிறது” என்று மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
முன்னதாக, கிட்ஹப் தளத்தின் செயலியான புல்லி பாய், இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி, அவர்களை ஏலத்திற்கு விடுவதாக அறிவித்திருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மும்பை சைபர் பிரிவு காவல்துறை அடையாளம் தெரியாத நபர்களுக்குமீது வழக்கு பதிவு செய்திருந்தது.
Source: pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.