Aran Sei

காசி விஸ்வநாதர் ஆலைய பராமரிப்பின்போது ஏற்பட்ட கட்டட விபத்து – 2 மேற்குவங்க  தொழிலாளர் உயிரிழப்பு

பிரதமர் மோடியின் கனவு திட்டமான காசி விஸ்வநாதர் ஆலயம் அழகுபடுத்தும் பணியின் ஒரு பகுதியான கட்டடங்கள் அகற்றத்தின்போது ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க தொழிலாளர் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் காலியாச்சக்கைச் சேர்ந்த தொழிலாளர்கள் அமினுல் மோமின் மற்றும் எபடுல் மோமின் உயிரிழ்ந்திருப்பதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் முகம்மது இம்ரான், ஆரிப் மோமின், ஷாஹித் அக்தர், சகியுல் மோமின், ஹக்கீம் கான், ஆரிப் மோமின் (அமினுலின் மகன்) ஆகியோர் படுகாயமடைந்திருப்பதாகவும் உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘அஸ்ஸாமில் கொரோனாவால் இறந்தவரின் உறவினர்களால் தாக்கப்பட்ட மருத்துவர்’ – மூவரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை

”இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பகுதி இடிக்கப்பட்ட கோயங்கா விடுதியில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கட்டட விபத்து நடைபெற்றபோது அதில் 30 தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் கோட்ட ஆணையர் தீபக் அகர்வால், “பாழடைந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் ஏன் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

மேற்குவங்க கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் – 600 கல்வியாளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம்

”தொழிலாளர் ஒப்பந்ததாரரான ராஜேஷ் குமார், தொழிலாளர்கள் தூங்குவதற்கு முறையான ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால், தொழிலாளர்கள் கிடைத்த இடங்களில் தூங்குகின்றனர்” என கூறினார்.

இந்திய ஒன்றிய அரசு மற்றும் உத்திரபிரதேச அரசு இணைந்து செயல்படுத்தும், காசி விஸ்வநாதர் கோயில் அழகுபடுத்து திட்டம் பிரதமர் மோடியால் 2018 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

இந்தப் பணியில் கடந்த 10 நாட்களில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது விபத்து இது. ஏப்ரல் 23 ஆம் தேதி லாகூரின் டோலாவில் 3 அடுக்குமாடி உயிரிழந்ததில், 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்