மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று விசாரணை நடத்தவேண்டுமென ஏறத்தாழ 600 கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த ஏறத்தாழ 600 பேராசிரியர்களும் துணைவேந்தர்களும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
‘அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படும் மேற்குவங்க ஆளுநர்’ – சிவசேனா குற்றச்சாட்டு
அந்த கடிதத்தில்,”தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்பைச் சார்ந்தவர்கள் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக முன்வந்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், மேற்குவங்கத்தில் பெரும்பான்மையிலான மக்கள் பயத்தில் உள்ளதாகவும், திரிணாமூல் காங்கிரஸ்க்கு எதிராக வாக்களித்தவர்கள் குற்றவாளியாக நடத்தப்பட்டு திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்படுவதாகவும், அவர்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
அதுமட்டுமல்லாது, சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் காரணமாக எண்ணற்ற மக்கள் அண்டை மாநிலங்களான அசாம், ஜார்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.