Aran Sei

சமூக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை – கர்நாடக காவல் துறை

மூக ஒழுங்கிற்கு புறம்பாக நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைகாட்சி நிறுவனங்களின் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களுர் மாநில காவல் துறை எச்சரித்துள்ளது.

கடந்த மார்ச் 6 அன்று கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி கர்நாடகமாநில காவல் துறை வழங்கி உள்ள உத்தரவில், கேபிள் தொலைக்காட்சி மற்றும் இணைய விதியின் அடிப்படையில் சமூக ஒழுக்கத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தடைசெய்ய வேண்டும் என கூறியுள்ளது என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இணைய ஊடக விதிமுறைகள் – விவாதித்த மணிப்பூர் ஊடகவியலாளர்களுக்கு ஆயுதப் படை மூலம் நோட்டீஸ்

கர்நாடக மாநில அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் ஆபாச காணொளி  தொலைக்காட்சிகளில் வெளியானதை அடுத்து அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியானது பெண்களைக் கேவலபடுத்தும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ அல்லது சமுக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ வெளியிடப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

சமுக ஒழுங்கிற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு குற்றம் நிருபிக்கப்பட்டால் முதல் முறை 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அடுத்தடுத்து குற்றம் நிருபிக்கபட்டால் தலா 5 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி விளகியதற்கு விளக்கமளித்த அமைச்சர் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, “இது உண்மைக்குப் புறம்பானது,இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும், சமுக ஒழுங்கிற்கு தீங்கு ஏற்பட்டதை அடுத்து பதவி விலகுகிறேன்” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இணைய ஏகாதிபத்தியத்தை  இந்தியாவில் அனுமதிக்க முடியாது” – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ஜார்கிஹோலியின் மீது தினேஷ் கள்ளஹல்லி என்பவர்தான் பாதிகப்பட்ட அந்தப் பெண்ணின் சார்பில் புகார் அளித்து, அந்தப் பெண்ணும் அமைச்சரும் இருக்கும் காணோளியையும் வெளியிட்டிருந்தார் என்று என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தினேஷ் கள்ளஹல்லி 5 கோடி பெற்றுக்கொண்டே ஜார்கிஹோலியின் மீது இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தினார் என்று கூறினார். அதன் காரணமாக தினேஷ் கள்ளஹல்லி புகாரைத் திரும்பப் பெற்றதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளானதலும் அந்தப் புகார் திரும்பபெறப்பட்டதாகவும் என்டிடிவி செய்தி தெரிவிக்கின்றது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்