Aran Sei

‘ஃபேஸ்புக்கில் பாஜகவுக்கு எதிராகப் பதிவிட்டால் நட்பு நீக்கம் செய்யுங்கள்’ – ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக உறுப்பினர்கள் தங்கள் முகநூல் கணக்குகளில் கட்சிக்கு எதிரானவர்களை நட்பு பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளதாக  தி நியூ இந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாஜகவுக்கு எதிரான பதிவுகளுக்கு விருப்பம் [லைக்] தெரிவித்தால் கூட அந்த உத்தரவை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தென்னை மரப்பொருட்களுக்கு அபராதம் விதித்த லட்சத்தீவு நிர்வாகம் – மட்டைகளில் பதாகைகள் சொருகி மக்கள் போராட்டம்

மேற்குவங்கத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் பாஜக சரிவர இயங்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள கொல்கத்தாவை சேர்ந்த முக்கிய பாஜக தலைவர், சில மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாது, மாநில தலைவர்களும் தேர்தலின்போது சமூக வலைத்தளங்களில் சிறப்பாகச் செயல்படத் தவறிய தலைமை நிர்வாகிகள்குறித்து தங்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்” என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்