ஆத்திரமூட்டுவது மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளைத் தூண்டும் விதமாகப் பேசியதற்காக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர் ராகுல் சின்ஹா பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதிவரை எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற 3வது கட்ட தேர்தலில் போது கூச் பெஹர் மாவட்டம் சிதல்குச்சி பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் கலவரம் ஏற்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாகப் பேசிய பாஜகவை சேர்ந்த ராகுல் சின்ஹா, “அந்தக் குற்றவாளிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான். மத்திய படைகள், சட்டத்திற்கு புறம்பான அவர்களின் இந்தச் செயலைத் தடுக்கும் முயற்சியில் தேவைப்பட்டால் மேலும் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஏழு, எட்டு பேரைக் கூடச் சுட்டுக் கொன்றிருக்கலாம்.” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் சின்ஹாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் சின்ஹா பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.