Aran Sei

’பிரிவினைவாத சக்திகளுக்கு அடிபணியமாட்டோம்’: வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக பாடல் வெளியிட்ட வங்காள கலைஞர்கள்

மேற்கு வங்கத்தில், பாஜகவை மறைமுகமாக விமர்சித்து வெளியிடப்பட்டிருக்கும் பாடலில் நடித்துள்ள ப்ரம்பிரதா சாட்டர்ஜி, ”ஜனநாயகத்தின் அனைத்து கூறுகளையும் கெடுக்கும் பிரிவினைவாத அரசியல் மற்றும் அதிகார பலம் கொண்ட சக்திகளுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்ற நிலையில், வங்க நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் இணைந்து பாசிச சக்திகளுக்கு எதிரான பாடலை வெளியிட்டுள்ளனர்.

சினிமா கலைஞர்கள், மேடை நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள் ஆகியோர் இணைந்து நிஜேதர் மோடே, நீதர் கான் ( எங்களுடைய பார்வையை பற்றிய பாடல்) எனும் தலைப்பில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரித்தி சென் மற்றும் விடோபிரோதா முகர்ஜி இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் பாடலில் பரம்பிரதா சாட்டர்ஜி, அனிர்பன் பட்டாச்சார்யா, சப்யசாச்சி சக்ரபர்த்தி, ருத்ரபிரசாத் செங்குப்தா, அனுபம் ராய், ருபாங்கர் பாக்ச்சி, ரித்தி சென், சுமன் முகோபாத்யாய் ஆகியார் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் “பாஜகவிற்கு வாக்கு இல்லை” எனும் சுவரொட்டிகள் எழுதிய மக்கள்: திருத்தி எழுதும் பாஜகவினர்

இந்தப் பாடல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, அதகரித்து வரும் வேலையின்மை, அதிகரித்து வரும்  எரிப்பொருட்கள் விலை (பெட்ரோல் – டீசல்), மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான குரலாக பதிவு செய்ய்ப்பட்டுள்ளது.

‘கலவரம் செய்யும் துரியோதனனும் துச்சாதனனும் நமக்கு வேண்டாம்’ – பாஜகவை விமர்சித்த மம்தா பானர்ஜி

இந்தப் பாடலில் பாஜக நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள கலைஞர்கள் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக, தங்கள் குரலைப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களான யூட்யூப். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வெளியாகிப் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதிமொழி

இந்தப் பாடலில் நடித்துள்ள நடிகர் பரம்பிரதா சாட்டர்ஜி, ”ஜனநாயகத்தின் அனைத்து கூறுகளையும் கெடுக்கும் பிரிவினைவாத அரசியல் மற்றும் அதிகார பலம் கொண்ட சக்திகளுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம்” என்று கூறியுள்ளார். தாங்கள் யாரும் திரிணாமூல் காங்கிரசின் அனுதாபிகள் இல்லை எனக் கூறியுள்ள சாட்டர்ஜி, ”எந்த அரசியல் கட்சியும் இங்கு புனிதம் இல்லை, ஆனால் ஒரு நேரத்தில் எதேச்சதிகார அரசியலை சுட்டிக்காட்டி, குறைந்த தீமையைத் தேர்வு செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

வங்க மண்ணில் பாஜகவினர் சுதந்திரமாக நடமாட முடியாது – எச்சரிக்கை விடுத்துள்ள மம்தா

”ஒரு வெறுப்பு சித்தாந்தத்தை பரப்பி, நமக்கு கட்டளையிடும் இருண்ட சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும்” எனவும் ”மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தேர்தல் சமயத்தில் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது” எனவும் இப்பாடலின் இயக்குநர் ரித்தி சென் கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்