மோடியின் 56 அங்குல மார்புக்கு கீழே, அவரது கோடீஸ்வர நண்பர்களுக்காகத் துடிக்கும் சிறிய இதயம் இருக்கிறது, எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சகாரன்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது இதைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்கும் விதமாகப் பேசிய பிரியங்கா, புதிய நாடாளுமன்ற வளாகம் அமைக்க 20 ஆயிரம் கோடி ரூபாய், இரண்டு தனி விமானங்கள் வாங்க 16 கோடி ரூபாய் செலவிட முடிந்த பிரதமரால், கரும்பு விவசாயிகளுக்கு உறுதியளித்த 15 ஆயிரம் கோடி ரூபாய் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையென அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமருக்கு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைகளில் 78 நாட்களாகப் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையென பிரியங்கா காந்தி பேசியுள்ளார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
பிரதமரும், பாஜக தலைவர்களும், நாடாளுமன்றத்தில் ”விவசாயிகளைக் கேலி செய்கிறார்கள்” என விமர்சித்த பிரியங்கா, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என உறுதியளித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சியின் 10 நாள் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ பிரச்சாரத்தை, சகாரன்பூர் மாவட்டத்தின், சுல்தான்பூர் சில்கானா பகுதியில், பிரியங்கா தொடங்கி வைத்தார்.
தவுலாஹடி கிராமத்தின் இளம் விவசாயி முகமது அலி, “டேட்டா [தரவுகள்] மட்டும் இருந்தால் போதாது, நாடு வளர ஆட்டாவும் [கோதுமை மாவு] தேவை” என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் மறந்து விட்டனர்”, எனப் பேசியுள்ளார்.
சிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்
பிரியங்கா காந்தியை பார்க்கவும், ராகேஷ் திகாயத்தை ஆதரிக்கவும் வந்தேன் எனப் பாட்னி கிராமத்தைச் சேர்ந்த ஷாஹித் கான் கூறியுள்ளார்.
பிரியங்கா காந்திக்கு முன்னர் மேடையேறிய, கவிஞரும் அரசியல்வாதியுமான இம்ரான் பிரதாப்கரி, ராமர் கோயில் இயக்கம்மூலம் வளர்ந்தததால், பிரதமரும் ஒருகாலத்தில் ஆந்தோலஜீவி தான் என்பதை நினைபடுத்தியுள்ளார்.
மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருந்த இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 144-ன் கீழான தடை உத்தரவையும் மீறி, மகா பஞ்சாயத்து நடைபெற்றதாக, தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.