வாட்சப் குழுவில் இருப்பது குற்றமாகாது என டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் உமர் காலித் தெரிவித்துள்ளார்.
டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருக்கும் பிணை மனுவில், “டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அனைவரையும் வாட்சப் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள் என்ற ஒரே காரணத்தைக் கூறி குற்றவாளிகளாக சித்தரிக்க காவல்துறை முயல்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
கலவரம் மேற்கொள்ள சதி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிக்கை ஒரு வளமான கற்பனை என உமர் காலித்தின் வழக்கறிஞர் திரிதீப் பைஸ் வாதிட்டுள்ளார்.
”உமர் காலித்தின் வழிகாட்டுதல்களின் பெயரில் சர்ஜுல் இமாம் வாட்சப் குழுவை உருவாக்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சாலை மறியல் செய்வது குற்றமாகுமா?. எங்கள் போராட்டத்தில் சாலை மறியலும் இடம்பெறும் என்று ஒரு கூட்டம் போட்டுச் சொல்வதே குற்றமாகுமா?” என பய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கின் விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துக் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
Source : ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.